தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ஆயுத பூஜை உற்சாகமாக கொண்டாட்டம்

ஆயுத பூஜை உற்சாகமாக கொண்டாட்டம்

ஆயுத பூஜை உற்சாகமாக கொண்டாட்டம்


ADDED : அக் 20, 2026 02:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 02:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி;தர்மபுரி மாவட்டத்தில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.

ஆயுத பூஜையையொட்டி தர்மபுரி நகரிலுள்ள பூ மார்க்கெட் மற்றும் முக்கியக் கடைவீதிகளில் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது. பூஜை பொருட்கள் விற்பனை அதிகரித்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மல்லிகை, சாமந்தி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்கள், வாழைப்பழம், தேங்காய், பொரி, கடலை, வாழை இலை மற்றும் அலங்கார பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தை மற்றும் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் மற்றும் மலர்களால் அலங்கரித்து வழிபட்டனர். மாணவர்கள் தங்களது புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வைத்து, சரஸ்வதி தேவியை வழிபட்டனர். பாரம்பரியத்தையும் உழைப்பின் சிறப்பையும் போற்றும் வகையில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாட்டம் களைகட்டியது.

* அரூரில், பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகிலுள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. அரூர், அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., சம்பத்குமார், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அரூர் டி.எஸ்.பி., அலுவலகம் எதிரிலுள்ள கார் மார்க்கெட்டில், சுற்றுலா வேன்கள், கார்கள் ஆகியவற்றிற்கு அதன் ஓட்டுனர்கள் துாய்மை செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூமாலைகள் மற்றும் வாழை மரங்களால் அலங்கரித்து வழிபட்டனர். அதேபோல், ஆட்டோ ஸ்டாண்டிலும் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us