/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
/
மாலை அணிந்து விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED : நவ 17, 2024 01:48 AM
மாலை அணிந்து விரதத்தை
துவக்கிய ஐயப்ப பக்தர்கள்
ஈரோடு, நவ. 17-
தமிழகத்தில் இருந்து, ஆண்டுதோறும் இருமுடி கட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம்.
கார்த்திகை மாத பிறப்பையொட்டி, ஈரோட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று அதிகாலை நீராடி, கோவிலுக்கு சென்று இஷ்ட தெய்வங்கள், குல தெய்வம் மற்றும் ஐயப்பனை வணங்கி துளசிமாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ ஐயப்பா சேவா நிறுவனத்தின் ஐயப்பன் கோவிலில் நேற்று அதிகாலை திரளான பக்தர்கள், கோவில் குருசாமி முன்னிலையில் சரண கோஷத்துடன் மாலை அணிந்தனர்.
இக்கோவிலில் தை 1 வரை தினமும் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. டிச.,26ல் மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு சிறப்பு ஹோமம், ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம் நடக்கிறது. டிச., 26ல் பெண்கள் தீபச்சுடர் ஏந்தி செல்லும் திருவிளக்கு ஊர்வலம், ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் இருந்து புறப்படுகிறது.