/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பி.பள்ளிப்பட்டியில் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்
/
பி.பள்ளிப்பட்டியில் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்
பி.பள்ளிப்பட்டியில் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்
பி.பள்ளிப்பட்டியில் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்
ADDED : டிச 29, 2024 12:52 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 29---
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பி. பள்ளிப்பட்டி ஊராட்சியில் அஜ்ஜம்பட்டி, வாசக்கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 5,000 த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் பி.பள்ளிப்பட்டியில் தர்மபுரி -பொம்மிடி சாலையில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் வழியாக ஒகேனக்கல் குடிநீர் குழாய் மற்றும் வாணியாறு அணை குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் மூலம் பொ.மல்லாபுரம், பையர்நத்தம், மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள,, 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் செல்கிறது.
ஏரியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாக ஏரிக்கு செல்கிறது. தண்ணீர் நிற்கும் போது அக்குழாயில் ஏரி நீர் செல்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யவில்லை. பி.பள்ளிபட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு, ஒகேனக்கல் குடிநீர் கிடைப்பது இல்லை. இந்நிலையில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாவது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.