ADDED : செப் 03, 2026 02:22 AM
அ நிறம் | அளவு
நல்லம்பள்ளி: தொப்பூர் அருகே, மூன்று வயது பெண் குழந்தையை தீயணைப்பு துறையினர் கிணற்றில் சடலமாக மீட்டனர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள ஜருகு மேல்கால-னியை சேர்ந்த கார்ப்பென்டர் குமார், 35. இவரது மனைவி சந்-தியா, 30. தம்பதியின், 2வது பெண் குழந்தை எப்சிபா, 3. நேற்று மாலை ஜருகு அருகே, மல்லிசெட்டிகொட்டாய் கிராமத்திற்கு செல்லும் வழியிலுள்ள
விவசாய கிணற்றில் எப்சிபா
சடலமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
தகவல்படி தர்மபுரி தீயணைப்பு துறையினர் மற்றும் தொப்பூர் போலீசார் சம்பவ இடம் சென்று கிணற்றில் சடலமாக கிடந்த பெண் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
