ADDED : நவ 11, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி கிழக்கு மாவட்ட, பா.ம.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடத்துாரில் நடந்தது. மாவட்ட தலைவர் அல்லிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அரசாங்கம் வரவேற்றார். கூட்டத்தில் மாநில உழவர் பேரியக்க செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ.,வேலுசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில் பேசினர்.
வரும், 14ல் பொம்மிடி, கம்பைநல்லுாரில் நடக்கும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வரும் பா.ம.க., தலைவர் டாக்டர் அன்புமணி, பசுமை தாயகம் தலைவர் சவுமியா ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். கிளைக்கூட்டங்கள், திண்ணை பிராசாரம் மேற்கொள்ளுதல், மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.