sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முடி திருத்தும் தொழிலாளர் சங்க மாநாடு

/

முடி திருத்தும் தொழிலாளர் சங்க மாநாடு

முடி திருத்தும் தொழிலாளர் சங்க மாநாடு

முடி திருத்தும் தொழிலாளர் சங்க மாநாடு


ADDED : மார் 03, 2026 10:16 AM

Google News

ADDED : மார் 03, 2026 10:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து வெல்லும் கோரிக்கை மாநாடு, பென்னாகரத்தில் நடந்தது. தர்மபுரி மாவட்ட தலைவர் லட்சுமி காந்தன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் நடராஜன் பாரதிதாசன் கோரிக்கை குறித்து பேசினார்.

அப்போது, தமிழ்நாட்டில், 234 தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம், 10 ஆயிரம் வாக்கு வங்கி உள்ள சமூகம், மருத்துவ சமூகம். இதுவரை இந்த சமூகத்தில் இருந்து எவரும் சட்டசபையோ, நாடாளுமன்றமோ சென்றது இல்லை. எங்களது கோரிக்கைகளை அரசு செவி சாய்க்கவில்லை. நெசவாளர்களுக்கு, வழங்குவது போல் பாரம்பரிய முடி திருத்தம் செய்வோருக்கு இலவச மின்சார வழங்க வேண்டும்.

மீனவர் சமுதாய மாணவர்கள், மீன்வள கல்லுாரியில், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அதன் மூலம் படிக்கின்றனர். அதேபோன்று தமிழ்நாடு அரசு சித்தா மருத்துவக் கல்லூரியில் பாரம்பரிய மருத்துவர் சமுதாயத்தை சார்ந்த, எங்களின் மாணவர்களுக்கும், 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றா விட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் சமுதாய மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டோம் என, தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us