ADDED : அக் 05, 2026 01:18 AM
அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேடு பகுதியில், தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், பி.டி.ஓ., ஆபீஸ், வங்-கிகள், ஆதிதிராவிடர் நல அலுவலகம் மற்றும் அரசு மருத்துவ-மனை உள்ளன.
மேலும், மக்கள் அதிகம் கூடும் இடமாகவும் உள்ளது. இப்பகுதியில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட வசதி இல்லா-ததால், பெண்கள், முதியவர்கள் உள்பட, அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கச்சேரிமேட்டில் கழிப்-பறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர, நக-ராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
