/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி கட்டடம் கட்ட பூமி பூஜை
/
அரசு பள்ளி கட்டடம் கட்ட பூமி பூஜை
ADDED : அக் 12, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளி கட்டடம்
கட்ட பூமி பூஜை
தர்மபுரி, அக். 12-
பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1.14 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்ட பூமிபூஜை நேற்று நடந்தது.
பூமிபூஜை பேரூராட்சி சேர்மன் முரளி தலைமையில் நேற்று நடந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஜீவா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பாலக்கோடு பேரூராட்சி நிதியிலிருந்து, 1.14 கோடி ரூபாய் மதிப்பில் தலா, 6 வகுப்பறைகள் கட்டடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தனர். பேரூராட்சி துணை சேர்மன் தாஹசீனாஇதாயத்துல்லா, பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், ரூஹித் பள்ளி மேலாண்மை குழு உறுப்பிணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.