/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மரத்தில் பைக் மோதல்; தனியார் ஊழியர் பலி
/
மரத்தில் பைக் மோதல்; தனியார் ஊழியர் பலி
ADDED : ஜூன் 24, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுாரை சேர்ந்தவர் எத்திராஜ், 40; பாப்பிரெட்டிப்பட்டியிலுள்ள தனியார் பைக் ஷோரூம் ஊழியர்.
நேற்று மதியம் சாமியாபுரம் கூட்ரோட்டிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி தன் ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கில் வந்தார். தனியார் கிழங்கு மில் எதிரே கட்டுப்பாட்டை இழந்து பைக், புளிய மரத்தின் மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு, சுபா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சுபா புகார் படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.