ADDED : மே 15, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
அரூர்; தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பட்டவர்த்தியை சேர்ந்தவர் தீபா, 28, இவர், எருமி-யாம்பட்டியில் குணசேகரன் என்பவருக்கு சொந்-தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
கடந்த, 7ல் காலை, 10:00 மணிக்கு தீபாவின் தம்பி அஜீத்குமார் சென்னை செல்வதற்காக அவரது பல்சர் பைக்கை தீபா குடியிருக்கும் வீட்டின் கீழே உள்ள பொன்னி எலக்ட்ரானிக் கடை அருகில் நிறுத்திவிட்டு சென்றார். அடுத்த நாள் காலை தீபா வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. புகார் படி கோபிநாதம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
