தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஒகேனக்கல்லில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

ஒகேனக்கல்லில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

ஒகேனக்கல்லில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி


ADDED : டிச 28, 2025 08:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2025 08:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒகேனக்கல்: ஒகேனக்கல் வனத்துறை சார்பில், ஒருங்கி-ணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும், ஒருங்கிணைந்த பற-வைகள் கணக்கெடுப்பு தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறையினர் ஒன்றிணைந்து, கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நி-லையில், அழிந்து வரும் சூழ்நிலையில் உள்ள பறவைகளை பாதுகாக்கும் பொருட்டு ஒகே-னக்கல் வனப்பகுதியில் உள்ள அரியவகை பற-வைகள் மற்றும் தமிழகத்தில் குளிர்காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, ஒகே-னக்கல் வனச்சரகத்தில் ஒகேனக்கல் ரேஞ்சர் சிவகுமார் தலைமையிலான வனக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஊட்டமலை, ஆலம்பாடி, முயல் மடுவு, சின்னாறு வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.

இதில் அரியவகை பறவைகள் மற்றும் கொக்கு, நாரை, நீர் காகம், இருவாச்சி பறவை, சிட்டுக்கு-ருவி மற்றும் தேன் சிட்டு, செண்பகம், அரியவகை ஆந்தை, துடுப்பு வால் கரைச்சான், செந்தலை பஞ்-சுருட்டான், வென் புருவ வாலாட்டி, மணிப்புறா, இன்னும் பல வகையான பறவைகளை கண்டறிந்து புகைப்படம் எடுத்து கணக்கிடும் பணி நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us