/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பழங்குடியினருக்கு பட்டா வழங்க கோரி பா.ஜ.,கண்டன ஆர்ப்பாட்டம்
/
பழங்குடியினருக்கு பட்டா வழங்க கோரி பா.ஜ.,கண்டன ஆர்ப்பாட்டம்
பழங்குடியினருக்கு பட்டா வழங்க கோரி பா.ஜ.,கண்டன ஆர்ப்பாட்டம்
பழங்குடியினருக்கு பட்டா வழங்க கோரி பா.ஜ.,கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 20, 2024 07:46 AM
பாலக்கோடு : பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க கோரி, பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன், பா.ஜ., சார்பில் மேற்கு ஒன்றிய தலைவர் சேட்டு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளிலுள்ள பெருங்காடு, வேடம்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பஸ், குடிநீர், சாலை, ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இப்பகுதியில், பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீடு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் காவேரிவர்மன், செயலாளர் தெய்வமணி, மாநில துணைத் தலைவர் முரளி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.