ADDED : மார் 11, 2024 07:03 AM
அ நிறம் | அளவு
ஓசூர் : ஓசூர், பேகேப்பள்ளி பகுதியில், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணையும் விழா நேற்று நடந்தது.
ஒன்றிய தலைவர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில், மாற்று கட்சிகளில் இருந்து விலகிய, 250க்கும் மேற்பட்டோர், பா.ஜ.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் பார்லிமென்ட் தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற கடுமையாக உழைத்து, மீண்டும் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைய வேண்டும் என, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
