ADDED : அக் 14, 2026 05:08 AM

தர்மபுரி:தர்மபுரி
மாவட்ட, பா.ஜ., மகளிர் அணி சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்.,
அலுவலகம் முன், காங்., - எம்.பி., ராகுலை கண்டித்து, மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மாவட்ட மகளிரணி நிர்வாகி
கலையரசி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார்.
இதில்,
பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை
பாதுகாப்பதில் காங்., கட்சி உரிய நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
மாணவியருக்கு எதிரான பாலியல் தொல்லை தொடர்பான புகார்களில் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பான
விவகாரங்களில் அரசியல் வேறுபாடுகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதாக கூறும் கட்சிகள், பெண்கள் மற்றும்
மாணவியருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எழும்போது அவற்றை
கண்டிப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, துணை நிற்க
வேண்டும் என வலியுறுத்தினர்.
மாணவியருக்கு பாலியல் தொல்லை
கொடுத்த மருத்துவர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் செயலை கண்டிக்காத,
காங்., - எம்.பி., ராகுலுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், ராகுல்
மற்றும் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் ஆகியோரது பேனரை கிழித்து எரிக்க
முயற்சி செய்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்தனர்.
