ADDED : ஆக 16, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் நகர, பா.ஜ., சார்பில், சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நேற்று நடந்தது.நகர தலைவர் ஜெயகுமார் வெங்கட்ராஜ் தலைமையில், 50 க்கும் மேற்பட்டோர், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
அரூர், திரு.வி.க., நகரில் துவங்கிய பேரணி, 4 ரோடு, நடேசா பெட்ரோல் பங்க், சந்தைமேடு, கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு வழியாக மீண்டும் திரு.வி.க., நகரில் நிறைவடைந்தது.

