/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரத்த தான விழிப்புணர்வு பைக் பேரணி
/
ரத்த தான விழிப்புணர்வு பைக் பேரணி
ADDED : மே 09, 2024 06:10 AM
தர்மபுரி : தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின்,- 58வது அமைப்பு தினத்தையொட்டி, தர்மபுரியில் கிளைத்தலைவர் ஜெயகுமார் தலைமையில் ரத்ததான விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது.
மாநில பொருளாளர் நாகராஜன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி, தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் துவங்கி, சி.கே. சீனிவாசன் தெரு, ராஜகோபால் பூங்கா, தலைமை தபால் நிலையம், பை-பாஸ் சாலை வழியாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியை சென்றடைந்தது. பேரணியில், ரத்தம் கொடுங்கள், நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை பைக்கில் ஒட்டிச் சென்றனர்.