/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
இ.ஆர்.கே., கல்லுாரியில் ரத்த தான முகாம்
/
இ.ஆர்.கே., கல்லுாரியில் ரத்த தான முகாம்
ADDED : ஆக 20, 2025 01:39 AM
அரூர், -தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த எருமியாம்பட்டியிலுள்ள இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்கள், தர்மபுரி மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய மருத்துவச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்த தான முகாம், இ.ஆர்.கே., பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. இதை இ.ஆர்.கே., கல்வி நிறுவனங்களின் தலைவர் தாளாளர் செல்வராஜ் தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குனர் சோழவேந்தன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளரும், இ.ஆர்.கே., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வருமான முனைவர் சக்தி வரவேற்றார்.
தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் பேசினார். முகாமில் மருத்துவர் பழனிசாமி, இ.ஆர்.கே., மருந்தியல் கல்லுாரி முதல்வர் முனைவர் சிவக்குமார், இ.ஆர்.கே., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தீத்துமாலை, நிர்வாக அலுவலர் அருள்குமார் ஆகியோர் பேசினர். முகாமில் இ.ஆர்.கே., கல்வி குழுமத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு, 88 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர். கல்வியியல் கல்லுாரி முதல்வர்(பொ) கார்த்திக் நன்றி கூறினார்.