ADDED : ஆக 12, 2024 06:39 AM
அ நிறம் | அளவு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில், மாவட்ட தலைவர் ஜஹாங்கிர் தலைமையில் நடந்தது.
மாவட்ட துணைத்தலைவர் பாபு, நகர தலைவர் அப்துல் ஹமீது, பேரூராட்சி தலைவர் மாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என, 102 பேர் ரத்த தானம் செய்தனர். அவர்களிடம் இருந்து, 102 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் கன்னியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
