ADDED : மே 12, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, கெரகோடஹள்ளி அடுத்த தாதன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 40. இவரது மனைவி கோகிலா, 38. இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர்.
தம்பதிக்கு, 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை. இதில், 4 வயதுடைய சிறுவனான ஸ்ரீதர் நேற்று காலை, 10:30 மணிக்கு வீட்டில் விளையாடிய கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டிலிருந்த பிரிட்ஜ் சரிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த ஸ்ரீதர் பலியானார். காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
