ADDED : மே 10, 2026 01:18 AM
ஒகேனக்கல்: செங்கல்பட்டு மாவட்டம், பழைய பெருங்களத்துார், பாரிவள்ளல் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. தனியார் நிறுவன சேல்ஸ் மேனேஜர்.
இவரது மகன் சித்தார்த், 6. -ஏழுமலை தன் குடும்பத்தினர், 23 பேருடன் டிராவல்ஸ் வேனில் நேற்று முன்தினம் ஒகேனக்கல் வந்தார்.
அனைவரும், ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பின், 6 பரிசல்களில் காவிரியாற்றின் அழகை காண பரிசில் பயணம் செய்தனர். அப்போது ஒகேனக்கல் மணல் திட்டு என்ற இடத்தில் ஏழுமலை, அவரது மகன் சித்தார்த் ஆகியோர் பரிசலிலிருந்து கீழே இறங்கினர். அப்போது சிறுவன் சித்தார்த் காவிரியாற்றில் தவறி விழுந்தான். அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரி-சோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ஒகேனக்கல் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.
