/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மக்கள் தேர்தல் புறக்கணிப்பு; டி.ஆர்.ஓ., பேச்சுவார்த்தை
/
மக்கள் தேர்தல் புறக்கணிப்பு; டி.ஆர்.ஓ., பேச்சுவார்த்தை
மக்கள் தேர்தல் புறக்கணிப்பு; டி.ஆர்.ஓ., பேச்சுவார்த்தை
மக்கள் தேர்தல் புறக்கணிப்பு; டி.ஆர்.ஓ., பேச்சுவார்த்தை
ADDED : மார் 22, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், வட்டுவனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கோட்டூர்மலை கிராம மக்கள், லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.அதையறிந்த மாவட்ட டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று, மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அவர்களது கோரிக்கையான சாலை வசதியை மேம்படுத்தும் பணி அப்போதே துவங்கப்பட்டது. இதனால், கிராம மக்கள், வரும் லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதாக அதிகாரிகளிடம் உறுதியளித்தனர்.