ADDED : மே 13, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி டவுன் அம்பலதாடியை சேர்ந்தவர் எலக்ட்ரீஷியன் கணேஷ்பாபு, 52. இவரது மனைவி கீதா, 47, அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியை. தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
மே, 10 அதிகாலை, 5:30 மணிக்கு கணவருடன் கீதா பைக்கில் சென்றார். கிருஷ்ணாபுரம் போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில், கீதா சாலையில் விழுந்து காயமடைந்தார்.
அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த கீதா, நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உடல் உறுப்புக ளை தானம் செய்ய, குடும்பத்தினர் முன்வந்ததையடுத்து, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு, 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் தானமாக வழங்கப்பட் டன.
