ADDED : செப் 12, 2026 06:06 AM
தர்மபுரி; அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்-நிலைப்பள்ளியில், காமராஜர் காலை உணவு திட்-டத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சரவணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
காமராஜர் காலை உணவு திட்டத்தின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சரவணன், அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்-ளியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து, தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மெர்சி ரம்யா, மாவட்ட கலெக்டர் சர-வணன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையில் 'சிசிடிவி' கேமரா பொருத்தம், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, குடிநீர் வசதி, பொதுமக்கள் காத்திருக்கும் அறை மற்றும் நோயாளிகளை அழைத்து செல்லும் வாகனம் உள்ளிட்டவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் மதுமதி, மகளிர் திட்ட இயக்குனர் முத்துக்-குமாரசுவாமி, சி.இ.ஓ., ஜோதிசந்திரா, மருத்துவக் கல்லுாரி முதல்வர் மனோகர், உள்ளிருப்பு மருத்-துவர் நாகவேந்தன் உட்பட தொடர்புடைய அலு-வலர்கள் உடனிருந்தனர்.
