/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
/
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 05, 2025 01:38 AM
அரூர், உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, அரூரில், தனியார் நர்சிங் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய பேரணியை, அரூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கச்சேரிமேடு, போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும், அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பதாகைகளை மாணவ, மாணவியர் கையில் ஏந்திச் சென்றனர்.