தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பிரிட்டிஷ் ராணுவ தளபதி நினைவு தினம் அனுசரிப்பு

பிரிட்டிஷ் ராணுவ தளபதி நினைவு தினம் அனுசரிப்பு

பிரிட்டிஷ் ராணுவ தளபதி நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : மார் 22, 2026 07:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 07:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தர்மபுரி:அதியமான்கோட்டையில் உள்ள, பிரிட்டிஷ் ராணுவ தளபதி ரம்ஷேவின் நினைவிடத்தில், முன்னாள் ராணுவ வீரர்கள் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, தமிழகத்தில் ராணுவ படையை திறம்பட கட்டமைத்து தளபதியாக இருந்த ஜெ.டபுள்யூ.ரம்ஷே, தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் ராணுவ பயிற்-சியில் ஈடுபட்டபோது காயமடைந்து, 1846ம் ஆண்டு மார்ச், 21ல் உயிரிழந்தார். அவரது நினைவு நாளை, முன்னாள் ராணுவ வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகின்றனர்.

அதன்-படி , தகடூர் முன்னாள் ராணுவ வீரர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. துணை பொருளாளர் சுந்தரராஜன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நேற்று, 180-வது நினைவு தினத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் ராணுவ தளபதி ரம்ஷே மற்றும் அவரது குதிரை நினைவிடத்தில் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தை சேர்ந்த சின்னசாமி, மல்-லிகார்ஜூனன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us