/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு சலுகையால் 16,000 புதிய வாடிக்கையாளர்கள்
/
பி.எஸ்.என்.எல்., சிறப்பு சலுகையால் 16,000 புதிய வாடிக்கையாளர்கள்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு சலுகையால் 16,000 புதிய வாடிக்கையாளர்கள்
பி.எஸ்.என்.எல்., சிறப்பு சலுகையால் 16,000 புதிய வாடிக்கையாளர்கள்
ADDED : செப் 30, 2025 02:14 AM
தர்மபுரி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 4ஜி சேவையில், சுதந்திர தின சலுகையின் மூலம், தர்மபுரி மாவட்டத்தில், 16,000 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளதாக, பாரதிபுரம் அலுவலகத்தில் நேற்று, நிருபர்களை சந்தித்த பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் ரவீந்திர பிரசாத் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
தர்மபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மண்டலத்தில், 3,03,251 பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் உள்ளனர். எப்.டி.டி.எச்., பைபர் இணைப்புகள் மற்றும் சமர சிக்சா திட்டத்தில், அரசு பள்ளி களுக்கு இன்டர்நெட் சேவை என, 22,000 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல்., 4ஜி சேவையை, ஒரு ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு தினமும், 2 ஜி.பி., அதிவேக டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., மற்றும் உள்ளுர், எஸ்.டி.டி., அழைப்பு உள்ளிட்ட சேவைகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் கடந்த, 2 மாதத்தில், பி.எஸ்.என்.எல்., சேவையில், 16,000 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். மேலும், பி.எஸ்.என்.எல்., 4 ஜி சேவையை தங்கு தடையின்றி வழங்க, மலை கிராமங்களில், 19 டவர் உட்பட, 341 டவர்கள், மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்ட அதிநவீன கருவி கள் மூலம், அப்டேட் செய்யபட்டுள்ளது.
இதன் காரணமாக, 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகள் அதிவேகமாக செயல்படும். மற்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் பி.எஸ்.என்.எல்., சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும், ஒரு வருடத்திற்குள், 5ஜி சேவை வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. வத்தல்மலை பகுதியிலுள்ள மக்களுக்கான தேவை, சுற்றுலா பயணி களின் தேவை கருதி, சிக்னல் கோளாறுகளை தவிர்க்க, கூடுதலாக மற்றொரு மெபைல் டவர் அமைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதில், பி.எஸ்.என்.எல்., துணை பொதுமேலாளர் பிரபு துறை, கோட்ட பொறியாளர்கள் சரவணமணி, அனிதா, லீனா உட்கோட்ட பொறியாளர் கிஷோர்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.