/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ராமாக்காள் ஏரி அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம்
/
ராமாக்காள் ஏரி அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம்
ADDED : ஆக 21, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி ராமாக்காள் ஏரி அருகே, எரிந்த நிலையில் ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி டவுன் ராமக்காள் ஏரியா அருகே, அரசு டாஸ்மாக் கடை எதிரே, நேற்றிரவு, 7:40 மணிக்கு, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த, தர்மபுரி டவுன் போலீசார் எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.