/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொபட் மீது பஸ் மோதல்: முதியவர் பலி
/
மொபட் மீது பஸ் மோதல்: முதியவர் பலி
ADDED : ஜன 05, 2025 01:27 AM
மொபட் மீது பஸ் மோதல்: முதியவர் பலி
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஒடசல்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி, 65, விவசாயி; இவர் நேற்று மதியம், 1:30 மணிக்கு கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில் வீட்டிற்கு சென்றார். அரூர்-சேலம் சாலையில், டி.புதுார் பிரிவு ரோடு அருகே, சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த தனியார் பஸ், மொபட் மீது மோதியது. இதில், பஸ்சின் முன்பக்க  வலதுபுற டயரின் அடியில் துரைசாமி சிக்கிக் கொண்டார். மேலும், டயர் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்த துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். புகார்படி கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

