/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு
/
கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு
கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு
கருணாநிதியின் 102வது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட அழைப்பு
ADDED : ஜூன் 02, 2025 03:37 AM
தர்மபுரி: தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க. செயலாளர் பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102-வது பிறந்த நாளை நாளை, தர்மபுரி மேற்கு மாவட்டத்தில், தி.மு.க., சார்பில் மாவட்டம் முழுவதும் செம்மொழி நாள் விழாவாக கொண்டாட வேண்டும்.
ஆங்காங்கே கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பா-ளர்கள் கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் துாவி மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்-னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.
இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முன்னாள், இந்நாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாநில, -மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்-றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கிளை கழக நிர்வா-கிகள், அணிகளின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அமைப்-பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.
இதேபோன்று, தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் காலை, 9:30 மணிக்கு, அரூர் ரவுண்டானா அருகிலும், காலை 10:30 மணிக்கு காரிமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்திலும் கொண்டாடப்பட உள்ளது.
இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.