/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வன உரிமை குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
வன உரிமை குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 11, 2025 01:33 AM
தர்மபுரி, வன உரிமை குழு பிரதிநிதிகளுக்கு, வன உரிமை சட்டம் குறித்த, திறன் மேம்பாட்டு பயிற்சி, தர்மபுரியில் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி மற்றும் அரூர் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியங்களில் உள்ள, 466 குக்கிராமங்களில், 262 வன உரிமை குழுக்கள் செயல்படுகின்றன. இக்குழுக்களுக்கு வன உரிமை சட்டம்- - 2006 குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, தமிழக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர், பழங்குடியினர் நல இயக்குனர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன் படி நேற்று, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில், திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் திட்ட இயக்குனர் அசோக்குமார் தலைமை வகித்தார். ஊராட்சிகளின் உதவி இயக்குனர் விமல் ராஜ்குமார், ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சேதுலிங்கம் முன்னிலை வகித்தனர். ராஜன், செல்வன், சாத்துகுட்டி, முல்லை ஆகியோர், வன உரிமை சட்டம் குறித்து, விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
இதில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், நல்லம்பள்ளி, காரிமங்கலம், மொரப்பூர் ஆகிய ஒன்றியங்களில், புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் மறு சீரமைக்கப்பட்ட பழங்குடியின வன உரிமை குழுவின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர் என, 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.