/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வன உரிமை குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
வன உரிமை குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 12, 2025 01:02 AM
அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வன உரிமை சட்டம்--2006 குறித்து வன உரிமை குழு உறுப்பினர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் திட்ட இயக்குனர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
அரூர் ஆதி திராவிடர் நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் செல்வன், கலைச்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முல்லைவேந்தன், பயிற்சியாளர் ராஜன்காணி ஆகியோர், வன உரிமை சட்டம் குறித்து, விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக வன உரிமை சட்டம்-2006-ன் படி, பல முன்னேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த திட்டங்களின் செயல்பாடுகள் மக்களை சென்றடைய செய்வதற்காக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.