/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வன உரிமை குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
வன உரிமை குழுவினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூலை 13, 2025 01:48 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சித்தேரியிலும், வன உரிமை சட்டம்-- - 2006 குறித்து, வன உரிமை குழு உறுப்பினர்களுக்கான, திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்ட பழங்குடியினர் திட்ட இயக்குனர் அசோக்குமார் தலைமை வகித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி தாசில்தார் ஜெயசெல்வன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் அறிவழகன், அபுல் கலாம் ஆசாத், வன உரிமை குழு ஒருங்கிணைப்பாளர் கள் இளவரசி, குமரேசன் மற்றும் முதன்மை பயிற்சியாளர் செல்வம், சாத்து குட்டி, முல்லை ஆகியோர் வன உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். இதில் வன உரிமை குழுவினர் கலந்து கொண்டனர்.]

