/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
ஆர்ப்பாட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஜன 01, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என, அ.தி.மு.க., தலைமை அறிவித்திருந்தது.
அதனடிப்படையில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று முன்தினம், அ.தி.மு.க., சார்பில், பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில், ஆர்ப்பாட்டம் செய்ததாக, 20 பெண்கள் உட்பட, 570 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

