தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு


ADDED : அக் 19, 2024 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 03:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி, 43. பொ.மல்லாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 42. தி.மு.க., தர்மபுரி மேற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர். காந்திமதி, வெற்றிச்செல்வனுக்கு, பொம்மிடி, மின்வாரிய அலுவலகம் முன்புள்ள நிலம் சம்பந்தமாக, பிரச்னை உள்ளது.

வெற்றிச்செல்வன் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரச்னைக்குரிய நிலத்தில், காந்திமதி ஆடுகட்ட செட் கட்டியுள்ளார். இதை கடந்த, 15ல் வெற்றிச்செல்வன், அவரது தம்பி சுவாதீஸ்வரன் தட்டிக்கேட்டனர். பின், பொக்லின் மூலம் ஆடு செட்டை இடித்தனர். இதை கேட்ட காந்திமதி மற்றும் அவரது அக்கா மீனாட்சியை தாக்கினர். புகார் படி வெற்றிச்செல்வன், 42, சுவாதிஸ்வரன், 40, ஆகியோரை பொம்மிடி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us