/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு
/
தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு
தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு
தனியார் கிரஷரில் வெடிமருந்து வைத்திருந்த 3 பேர் மீது வழக்கு
ADDED : நவ 25, 2025 01:55 AM
பென்னாகரம், : பென்னாகரம் அருகே, தனியார் கிரசரில் உரிமையின்றி வெடிமருந்துகள் பதுக்கி வைத்த, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே, தனியாருக்கு சொந்தமான ஜல்லி, எம்.சாண்ட் தயாரிக்கும் கிரஷர் செயல்பட்டு வருகிறது. இதில் அனுமதியின்றி வெடிமருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக பென்னாகரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கிரஷரில் உரிமை இல்லாமல் பதுக்கி வைத்திருந்த, 746 வெடிமருந்து, 410 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக கிரஷருக்கு வெடி மருந்துகளை வழங்கிய ஜாகிர் உசேன், ரத்னா, கிரஷர் மேலாளர் சத்யராஜ் ஆகிய, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கிரஷர் மேலாளர் சத்யராஜை கைது செய்தனர்.