/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்களை தாக்கிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
/
பெண்களை தாக்கிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : அக் 19, 2024 03:07 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.துரிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி, 43. பொ.மல்லாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 42. தி.மு.க., தர்மபுரி மேற்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர். காந்திமதி, வெற்றிச்செல்வனுக்கு, பொம்மிடி, மின்வாரிய அலுவலகம் முன்புள்ள நிலம் சம்பந்தமாக, பிரச்னை உள்ளது.
வெற்றிச்செல்வன் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரச்னைக்குரிய நிலத்தில், காந்திமதி ஆடுகட்ட செட் கட்டியுள்ளார். இதை கடந்த, 15ல் வெற்றிச்செல்வன், அவரது தம்பி சுவாதீஸ்வரன் தட்டிக்கேட்டனர். பின், பொக்லின் மூலம் ஆடு செட்டை இடித்தனர். இதை கேட்ட காந்திமதி மற்றும் அவரது அக்கா மீனாட்சியை தாக்கினர். புகார் படி என, 16.55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல், சாக்கடை கால்வாய் அமைக்க, 15வது நிதி குழு திட்டத்தில், 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில், பாகலஹள்ளி பஞ்., தலைவர் முருகன், துணைத்தலைவர் ரம்யாகுமார், செயலாளர் சிவகாமி, வார்டு உறுப்பினர் அஜித் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து
கொண்டனர்

