தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பறக்கும் படையை மிரட்டிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

 பறக்கும் படையை மிரட்டிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு

 பறக்கும் படையை மிரட்டிய தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு


ADDED : ஏப் 03, 2026 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரியில், தேர்தல் பறக்கும் படை குழுவினரிடம் பணம் கேட்டு மிரட்டிய, தி.மு.க., ஒன்றிய செயலர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், மாநிலம் முழுதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. நேற்று முன்தினம் மதியம், 1:13 மணிக்கு, தர்மபுரி டவுன், ராமாக்கள் ஏரி அருகே, தேர்தல் பறக்கும் படை குழு தலைவர் பரமேஸ்வரன் தலைமையில், போலீசார் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த, பாப்பாரப்பட்டியை சேர்ந்த தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் வீரமணியின், காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதனால் கோபமடைந்த அவர், பறக்கும் படை குழுவினரிடம், 'என் காரில் பணம் இல்லை. காருக்கான டீசல் மற்றும் மதிய சாப்பாட்டுக்கு பணம் வேண்டும்' என, அதிகாரிகளை மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வீரமணி மீது, தர்மபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us