ADDED : நவ 23, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியூர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அஜ்ஜனஹள்ளி அடுத்த பாப்பான்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி சதீஷ்குமார், 32. இவருக்கும் அருகிலுள்ள நிலத்தை சேர்ந்த தம்பிதுரை, 40 என்பவருக்கும் வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்தது.
கடந்த, 16 அன்று சதீஷ்குமார் வீட்டிற்கு சென்ற தம்பிதுரை, அங்கிருந்த, 2 நாய்களை கத்தியால் வெட்டியுள்ளார். இதில், ஒரு நாய் கடந்த, 19 அன்று உயிரிழந்தது. இது குறித்து, சதீஷ்குமார் புகார் படி, ஏரியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

