/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலைமறியலில் ஈடுபட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு
/
சாலைமறியலில் ஈடுபட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு
ADDED : அக் 24, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏரியூர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா ஊர்நத்தத்தில் மொபைல் போன் டவர் இல்லாததை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தொண்ணகுட்ட அள்ளி வி.ஏ.ஓ., செந்தில்குமார் ஏரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, ஊர்நத்தத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 45, சீலநாயக்கனுார் அய்யம்பெருமாள், 40, சதீஷ், 23, அர்ச்சுனன், 38, மாது, 60, விஜி, 27, ராஜா, 45, உள்ளிட்ட, 52 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

