ADDED : மே 26, 2026 08:56 AM

அ நிறம் | அளவு
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற, மாணவ, மாணவியருக்கு முறையே, 5,000, 4,000, மற்றும், 3,000 ரூபாய், அதே போல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு முறையே, 3,000, 2,000, மற்றும் 1,000 ரூபாய் என, பரிசுத்தொகையை அரூரை சேர்ந்த ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., ரத்தினம், அவரது மனைவி வள்ளி ஆகியோர் வழங்கினர்.
இதில், தலைமையாசி-ரியர், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
