sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை

/

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை


ADDED : பிப் 10, 2025 01:36 AM

Google News

ADDED : பிப் 10, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பாண்டு, அரூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, மாம்பாடி, வேட்ரப்பட்டி, மொரப்பூர், செட்ரப்பட்டி, கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்திருந்தனர். கடந்த, 4 மாதங்களாக மரவள்ளிகிழங்கு அறுவடை நடந்து வரும் நிலையில், தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மரவள்ளி கிழங்கு விலை தொடர்ந்து சரிந்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: பொங்கலுக்கு முன், மரவள்ளிகிழங்கு டன் ஒன்று, 6,000 ரூபாய்க்கு விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் கொள்முதல் செய்தனர். அதன்பின், படிப்படியாக விலை குறைந்து, தற்போது, 5,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us