/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குறுவட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம்
/
குறுவட்ட அளவிலான குறை தீர்க்கும் முகாம்
ADDED : நவ 06, 2024 01:19 AM
குறுவட்ட அளவிலான
குறை தீர்க்கும் முகாம்
பாலக்கோடு, நவ. 6-
வெள்ளிசந்தை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், குறுவட்ட அளவிலான, பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, வெள்ளிசந்தை ஆர்.ஐ., அலுவலகத்தில் குறுவட்ட அளவிலான அனைத்து துறை சார்ந்த, பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம், ஆர்.ஐ., கோகிலா தலைமையில் நேற்று நடந்தது.
இதில், வெள்ளிசந்தை பிர்காவிற்க்கு உட்பட்ட கருக்கனஹள்ளி, அண்ணாமலைஹள்ளி, வெலகலஹள்ளி, பிக்கனஹள்ளி, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஹள்ளி, திம்மராயனஹள்ளி, ஜக்கசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மின் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம், மாற்று திறனாளிகளுக்கான உதவி உள்ளிட்டவை வேண்டி மனு
அளித்தனர்.

