சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வருகை
சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படை வருகை
ADDED : மார் 10, 2026 07:19 AM

தர்மபுரி: தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலுக்கான தேதி, ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட உள்ளனர். இதில், தமிழக போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவத்தினர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பட்டாலியன்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை துணை ராணுவப் படையான மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த, 6 பட்டாலியன்களை சேர்ந்த தொழிற்பாதுகாப்பு படையினர், தர்மபுரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், முதற்கட்டமாக ரயில் மூலம், பூனேவிலிருந்து அசிஸ்டண்ட் கமிஷ்னர் அகிலேஷ் யாதவ் தலைமையில் இன்ஸ்பெக்டர் உட்பட, 72 பேர் கொண்ட ஒரு பட்டாலியனை சேர்ந்த தொழிற்பாதுகாப்பு படையினர், நேற்று முன்தினம் சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தனர். பின் அங்கிருந்து நேற்று தர்மபுரிக்கு வந்தனர். மற்ற படையினர் தர்மபுரிக்கு வந்த பின், ராணுவ அணிவகுப்பு நடத்த உள்ளனர்.
