/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் மத்திய தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்: 150 பேர் கைது
/
தர்மபுரியில் மத்திய தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்: 150 பேர் கைது
தர்மபுரியில் மத்திய தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்: 150 பேர் கைது
தர்மபுரியில் மத்திய தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்: 150 பேர் கைது
ADDED : பிப் 17, 2024 12:37 PM
தர்மபுரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில், தர்மபுரியில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தர்மபுரி, டவுன் போஸ்ட் ஆபீஸ் முன் நடந்த மறியல் போராட்டத்துக்கு, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு, உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 100 நாள் பணிக்கு, 600 ரூபாயாக கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். சி.ஐ.டி.யு., மாநில துணைத் தலைவர் சிங்காரவேலு, எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் சண்முகவேல், தலைவர் அன்புமணி, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச் செயலாளர் மணி, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சிவலிங்கம் உள்பட பல்வேறு மத்திய தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.மறியலில் ஈடுபட்ட, 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.
மாலை, 5:00 மணிக்கு மேல் அவர்களை விடுவித்தனர். அரூர் கச்சேரிமேட்டில், மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எல்.பி.எப்., - ஐ.என்.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., ஏ.ஐ.சி.சி.டி.யு., உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த, 250 பேரை அரூர் போலீசார் கைது செய்தனர்.