/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி மாணவனுக்கு சி.இ.ஓ., பாராட்டு
/
பள்ளி மாணவனுக்கு சி.இ.ஓ., பாராட்டு
ADDED : டிச 27, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் விக்னேஷ் என்ற மாணவன், 29வது தேசிய இளைஞர் திருவிழாவையொட்டி, மாவட்ட அளவில் நடந்த வண்ணம் தீட்டுதல் போட்டியில் முதலிடம்
பெற்றார்.
தொடர்ந்து கடந்த, 24ல் சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து, மாணவன் விக்னேைஷ தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பாராட்டியதுடன், 2026 ஜனவரியில் டில்லியில் நடக்கும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

