ADDED : ஆக 21, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி, விருப்பாட்சிபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்-தவர் பிரியா, 45; இவரது கணவர் தர்மபுரியிலுள்ள, நகை அடகு கடையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை, 5:50 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் தெருவிலுள்ள வீட்டின் முன், பிரியா நின்று கொண்டிருந்தார். அப்போது, அருகில் வந்த நபர், திடீரென பிரியாவின் கழுத்திலிருந்த, தாலியுடன் கூடிய, 2 செயின் உட்பட, 7 பவுன் நகையை பறித்து கொண்டு, ஹெல்மெட் அணிந்திருந்த, மற்றொரு நபரின் பைக்கில் ஏறி, தப்-பினார். புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.