/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாரல் மழை: வாகன ஓட்டுனர்கள் அவதி
/
சாரல் மழை: வாகன ஓட்டுனர்கள் அவதி
ADDED : அக் 23, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாரல் மழை: வாகன
ஓட்டுனர்கள் அவதி
தர்மபுரி, அக். 23-
தர்மபுரியில் நாள்தோறும் பெய்து வரும் சாரல் மழையால், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி செல்கின்றனர்.
தர்மபுரியில், நேற்று காலை முதல் கடும் வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால், சாலையில் சென்றவர்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மாலை, 4:00 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய துவங்கியது.
இதில் நனைந்தபடியும், சிலர் குடை பிடித்த படியும் சாலையில் சென்றனர். வானம் கருமேக மூட்டமாக இருந்ததால், மாலை நேரத்திலேயே சாலை இருள் மூட்டமாக இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.