/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டய பொறியாளர் சங்க செயற்குழு கூட்டம்
/
பட்டய பொறியாளர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : டிச 22, 2024 01:26 AM
பட்டய பொறியாளர் சங்கசெயற்குழு கூட்டம்
தர்மபுரி, டிச. 22-
தர்மபுரியில், தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் மத்திய, மாநில, செயற்குழு கூட்டம் நேற்று, மாநில தலைவர் சிவகுமார் தலைமையில் நடந்தது. மாநில பிரசார செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் துரைபாண்டி பேசினார். இதில், பதவி உயர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவை ரத்து செய்ய வேண்டும். டிப்ளமோ படித்து, 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கும் மண்டல பயிற்சி இயக்குனர் பதவி உயர்வு வழங்கும் வகையில், விதிகளை தளர்வு செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்களை, 11 மாதங்களுக்கு ஒருமுறை பணி நீக்கம் செய்து, மீண்டும் பணி அமர்த்துவதை தவிர்த்து, தொடர்ந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும், ஒரே மாதிரியான ஊதியம் வழங்கி, பணி நிரந்தரப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் நடராஜன், முன்னாள் மாநில தலைவர் தண்டபாணி, அரசு அலுவலர் ஒன்றிய தர்மபுரி மாவட்ட தலைவர் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.