sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தர்மபுரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்வர்

/

தர்மபுரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்வர்

தர்மபுரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்வர்

தர்மபுரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை அறிவித்த முதல்வர்


ADDED : ஆக 18, 2025 03:44 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தடங்கத்தில், நேற்று நடந்த அரசு விழாவில், 362.77 கோடி ரூபாய் மதிப்பில், 73 முடிவுற்ற பணி-களை திறந்து வைத்தும், 512.52 கோடி ரூபாய் மதிப்பில், 1,044 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 70,427 பயனாளிக-ளுக்கு, 830.06 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி பேசியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க., ஆட்சியில், பயனடைந்தவர்-களின் பட்டியல் சொல்கிறேன். இதில், 2,84,091 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை, 22,087 பேருக்கு 'புதுமைப்பெண்' திட்டம், - 11,576 பேருக்கு 'தமிழ் புதல்வன்' திட்டம், 76,958 இளைஞர்க-ளுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி, 48,504 பள்ளி குழந்-தைகளுக்கு 'காலை உணவு' திட்டம், 4,22,535 பேருக்கு, 'மக்-களை தேடி மருத்துவம்' திட்டம், கலைஞரின் 'வருமுன் காப்போம்' திட்டத்தில், 93,379 பேர் பயன், 'இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் - 48' திட்டத்தில், 7,838 பேரின் உயிரை காப்பாற்றி உள்ளோம். 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்-டத்தில், 4,410 பயனடைந்துள்ளனர். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம், 59,374 பேர், வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் மூலம், 6,523 பேர், 'புதிய வேளாண் காடு வளர்ப்பு' திட்டத்தில், 2,125 பேரும், புதிய மின் இணைப்பு திட்-டத்தில், 14,514 பேரும் மின் இணைப்பு பெற்றுள்ளனர்.

தொழிலாளர் நலன் நல திட்டத்தில், 2,60,444 தொழிலாளர்க-ளுக்கு நிதியுதவி, 78,070 மகளிருக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்ட நிதியுதவி, 896 பேருக்கு தாட்கோ மூலம் கடனுதவி, 6,276 பேர் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

புதிய 5 அறிவிப்புகள்:

1. தர்மபுரி மாவட்டம், சித்தேரி பஞ்.,க்கு உட்பட்ட, 63 மலைக்-கிராமங்களில் வசிக்கும் பழங்

குடியின மக்கள் கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்-டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வாழும் பொதுமக்கள், பல்வேறு பணிகளுக்கு பாப்பிரெட்டிபட்டி தாசில்தார் அலுவலகத்-திற்கு செல்ல துாரம் அதிகம் என்பதால் சிரமப்படுகின்றனர். அதனால், இந்த கிராமங்கள் எல்லாம் அருகிலுள்ள, அரூர் வருவாய் வட்டத்தில் இணைக்கப்படும்.

2. ஒகேனக்கல் -தர்மபுரியை இணைக்கக்கூடிய மாவட்ட நெடுஞ்-சாலையில், தர்மபுரி அடுத்துள்ள ஆட்டுக்காரம்பட்டி முதல் பென்-னாகரம் வரை இரு வழிதடமாக உள்ள, 25 கி.மீ., சாலை, 165 கோடி ரூபாய் மதிப்பில், 4 வழித்தடமாக மேம்படுத்தப்படும்.

3. நல்லம்பள்ளி ஒன்றியம் பரிகம் பஞ்., பரிகம் முதல் மலையூர் காடு வரையுள்ள வனச்சாலை, 10 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்-சாலையாக மேம்படுத்தப்படும். நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்-நிலைப் பள்ளி

யில், 7.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை கட்ட-டங்கள் கட்டப்படும்.

4. அதிகளவில், புளி உற்பத்தி செய்யும் தர்மபுரி மாவட்ட விவ-சாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், 11.30 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும்.

5. அரூர் நகராட்சியில் வசிக்கும் மக்கள் நலன் கருதி, வள்ளி

மதுரை குடிநீர் வழங்கல் திட்டம், 15 கோடி மதிப்பில், புதிய குழாய்களை பதித்து, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us