/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் முடிவுற்ற பணிகளை காணொலி மூலம் முதல்வர் திறப்பு
/
ஒகேனக்கல்லில் முடிவுற்ற பணிகளை காணொலி மூலம் முதல்வர் திறப்பு
ஒகேனக்கல்லில் முடிவுற்ற பணிகளை காணொலி மூலம் முதல்வர் திறப்பு
ஒகேனக்கல்லில் முடிவுற்ற பணிகளை காணொலி மூலம் முதல்வர் திறப்பு
ADDED : நவ 27, 2024 01:15 AM
ஒகேனக்கல்லில் முடிவுற்ற பணிகளை
காணொலி மூலம் முதல்வர் திறப்பு
பென்னாகரம், நவ. 27-
ஒகேனக்கலில் 18.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று, திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல்லில், சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக மசாஜ் அறைக்கான கட்டடம், உடை மாற்றும் அறை, காவிரியாற்றிலுள்ள மெயின் அருவிகளையும், இயற்கை அழகையும் சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் சீரமைக்கப்பட்ட தொங்கும் பாலம், உணவகம், நடைபாதை, ஐந்து அருவியை பார்த்து ரசிக்கக்கூடிய உயர்மட்ட, வியூ பாயின்ட் என, பல்வேறு திட்டப் பணிகள் சுற்றுலாத்துறை சார்பில், 18.50 கோடி மதிப்பீட்டில் நடந்து வந்தது. இப்பணிகள் முடிவு பெற்ற நிலையில், நேற்று தமிழக முதல்வர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையெடுத்து, ஒகேனக்கலில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாந்தி, தி.மு.க., - எம்.பி., மணி, பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி, சுற்றுலாத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மீண்டும் துணிப்பை பயன்படுத்தும் நோக்கில், 10 ரூபாய் செலுத்தி துணிப்பை வழங்கும் இயந்திரத்தை, மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.